முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இங்கிதம் தெரியுமா?

இங்கிதம்' என்ற சொல்லுக்கு இனிமை என்பதே உட்பொருள். எண்ணக் குறிப்பு என்றும் அர்த்தமுண்டு.  இதற்கு மாறாகப் பேசுபவர்களை "இங்கிதம் தெரியாதவர்' என்று கூறுவதுண்டு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
பகிர்:


"இங்கிதம்' என்ற சொல்லுக்கு இனிமை என்பதே உட்பொருள். எண்ணக் குறிப்பு என்றும் அர்த்தமுண்டு.  இதற்கு மாறாகப் பேசுபவர்களை "இங்கிதம் தெரியாதவர்' என்று கூறுவதுண்டு. வள்ளலார் "இங்கித மாலை' , "இங்கிதம் பத்து' என்ற பெயர்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

நாடகங்களில் திரைச்சீலை அமைக்கும் முறை பார்சி நாடகக் குழுவினரால் தமிழகத்தில் அறிமுகமானது.  இங்கு அறிமுகப்படுத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது, பத்திரிகை நடத்தினார். அதன் பெயர் "இந்தியன் ஒப்பினியன்'. 4 பக்கங்கள் கொண்ட இந்தப் பத்திரிகையில் தமிழ், ஆங்கிலம், குஜராத், ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு தலா ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →