முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வசனங்களில் தனித்துவம்

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை. ஒரு காலத்தில் அடுக்கு மொழி வசனங்கள் நீட்டி முழக்கும் வசனங்கள் ரசிக்கப்பட்டன. அவை மொழி முழக்கங்களாக  இருந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை. ஒரு காலத்தில் அடுக்கு மொழி வசனங்கள் நீட்டி முழக்கும் வசனங்கள் ரசிக்கப்பட்டன. அவை மொழி முழக்கங்களாக  இருந்தன. அது ஒரு காலம். பிறகு வசனம் எதார்த்தமான மொழிக்கு மாறியது. சொற்கள் குறைந்து கூர்மையானதாக மாறியது. பிறகு நவீனம் என்ற  பெயரில் புரியாத வசனங்கள் வந்தன. 

சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற போதிலும் எத்தனை பெரிய இயக்குநராக இருந்தாலும் ஒரு திரைப்படத்தில் வசனத்திற்கான  இடத்தை மறுப்பதில்லை. சூழலுக்கேற்ற  மாதிரியும் மொழி அலங்காரம் இல்லாமலும் கருத்துச் செறிவுடனும் வடிகட்டிய வார்த்தைகளைக் கொண்டும் சொற்சிக்கனத்துடன் எழுதப்படும் வசனங்கள்  ரசிக்கப்படுகின்றன. 

இப்படி  வசனங்கள் எழுதுவது ஒரு கலை. அப்படிப்பட்ட கூர்மையான வசனங்களை அண்மையில் வெளிவந்துள்ள "விஜயானந்த்' படத்தில் எழுதியதுடன்  பாடல்களையும் எழுதியவர் மதுரகவி.

குறிப்பாக ஒரு மொழிமாற்றுப் படமான இந்த "விஜயானந்த்' "படத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. ""பூர்வீகம் தேனி என்றாலும் நாங்கள் இருப்பது வத்தலக்குண்டு  அருகே தேவரப்பன்பட்டி கிராமம். என் பெயர் சிவமுருகன். 

காளிதாசனின் கவித்துவத்தில் மனம் லயித்து என் பெயரை மதுரகவி என்று வைத்துக் கொண்டேன். ஏனென்றால் காளிதாசனுக்கு மதுரகவி என்றொரு பட்டம் உண்டு. நான் சின்ன வயதிலேயே சினிமா ஆர்வத்துடன் சென்னை வந்தவன். நான் அடிப்படையில் ஓர் உதவி இயக்குநர் தான். சில படங்களில் பணியாற்றி இருக்கிறேன். பல்வேறு திரைப்படங்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்வேன்.எனக்குக் கிராமத்து மண் சார்ந்த விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அது சார்ந்த படங்கள் நேரடிப்படமாக இருந்தாலும் மொழிமாற்றுப் படங்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் கதையைச் செழுமைப்படுத்துவேன். இப்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்துக்கு நன்றி. இன்னும் நல்ல நல்ல பயணங்கள் கிடைக்க வேண்டும்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →