முப்பாலும், இப்பாலும்
பல ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியில் இலக்கிய மன்ற மாநாடு தமிழரசு கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியில் இலக்கிய மன்ற மாநாடு தமிழரசு கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
பிரபுலிங்க லீலை (வீர சைவ நூல்) யிலிருந்து சில காட்சிகளை வாரியார் விளக்கிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அன்பர் ஒருவர் வாரியர் சுவாமிக்கு, ஒரு குவளையிலிருந்து ஏதோ கொண்டு வந்து கொடுத்தார்.
Advertisement
வாரியார் சுவாமிகள் அதைக் கவனித்தார். உடனே அவர், "இது காப்பி. ஆனால் நான் சொல்வதோ அசல்' என்றார்.
அவருக்கு அருகே அமர்ந்திருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி "இது காப்பி அல்ல. பால்' என்று விளக்கினார். உடனே வாரியார் "நான் முப்பாலும் கடந்து அப்பால் இருக்கிறேன். இதோ இப்பாலும் வந்து விட்டது' என்று கூறி முடித்தார்.
இதை கேட்ட கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.