4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
கோராபஜார் வாக்குச்சாவடியில் 4 முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது குறித்து...
மேற்கு வங்கத்தின் கோராபஜார் வாக்குச்சாவடியில் 4 முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியும் பிரச்னை சரியாகவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தேர்தல் அலுவலர்களிடன் புகார் அளித்துள்ளார்.
மக்கள் வெய்யிலில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பதால் உடனடியாக பிரச்னையை சரி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
முதல் கட்ட வாக்குப்பதிவான இன்று காலை 7 மணி முதல் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முர்ஷிதாபாத்தில் உள்ள நோடா வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சியில் இருந்து விலகிய ஹுமயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதன் உன்னயான் கட்சியினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதனிடையே கோராபஜார் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை 4 முறை மாற்றியும் பிரச்னை சரியாகவில்லை.
வாக்குச்சாவடிகளில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவு குறித்து ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், கோராபஜார் தொகுதியில் பிரச்னை சரியாகவில்லை என்பதை அறிந்து தேர்தல் அலுவலர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் கோரிக்கை வைத்தார்.
அவர் பேசியதாவது:
''பொதுமக்கள் பலர் வாக்களிக்க நீண்ட வரிசையில் வெய்யிலில் காத்துக்கிடக்கின்றனர். அவர்கள் வீட்டுக்குச் செல்ல குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். உங்கள் தலையீடு அவசியமானது. இங்கு 4 முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியும் பிரச்னை சரியாகவில்லை. புதிதாக மாற்றப்பட்ட இயந்திரத்திலும் கோளாறு ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பஹராம்பூர் தொகுதியில் ஆதிர் ரஞ்சன் செளத்ரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
West Bengal Elections 2026 Voters At Gorabazaar Polling Booth Complain Of EVM Glitch, Congress' Adhir Chowdhury Dials Official
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.