FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள 162 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது தொடர்பாக...

9 செப்டம்பர் 2026, 12:12 pm IST
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - பிடிஐ
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள 162 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள 18 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட தேர்தலில் 57.52 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 7,683 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு நடைபெறும் இந்த 162 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆல்வார், பரத்பூர், பிகானேர் மற்றும் பில்வாரா ஆகிய 4 மாநகராட்சிகள், 27 நகராட்சி மன்றங்கள் மற்றும் 131 நகராட்சிகள் அடங்கும்.

Advertisement

Advertisement

முதல்கட்ட வாக்குப் பதிவில் 5,393 கவுன்சிலர் பதவிகளுக்கு 20,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஜெய்ப்பூர் நகராட்சி உள்பட மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் செப்.14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Voting in the first phase of Rajasthan's urban local body elections began on Wednesday across 162 civic bodies across the state

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments