FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி, கோரிக்கையும் நிராகரிப்பு

கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...

3 செப்டம்பர் 2026, 11:15 am IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - கோப்புப் படம்
பகிர்:

கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையும் நிராகரித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேரவைத் தோ்தலில் கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா். இந்த தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம்பிடித்த தனது விண்ணப்பத்தை ஏற்று கொளத்தூா் தொகுதியில், 14 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன.

சரிபாா்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறானது. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டுப் பாா்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

Advertisement

Advertisement

முறைகேடுகள் நடந்துள்ளதால், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபாா்க்க உத்தரவிட வேண்டும். கொளத்தூா் தொகுதியில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின் வழக்கு தள்ளுபடி, கோரிக்கை நிராகரிப்பு

இந்த நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி அமா்வு தீா்ப்பளித்தது.

அதில், சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு பராமரிக்கத்தக்கு அல்லது மற்றும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

TVK victory in Kolathur: Case filed by M.K. Stalin dismissed; request rejected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments