பாலாவின் அங்கீகாரம்
இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சித்திரன்'. மலையாள இயக்குநர் பத்மகுமார் எழுதி இயக்குகிறார்.
இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'சித்திரன்'. மலையாள இயக்குநர் பத்மகுமார் எழுதி இயக்குகிறார். ஆர். கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மலையாளத்தில் "ஜோசப்' என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் இது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாலா.... ""ஜோசப்' என்ற படத்தை ரீமேக் செய்யலாம். அதில் நான் நடிக்க இருக்கிறேன் என்று ஆர். கே. சுரேஷ் என்னிடம் சொன்னார். அப்படி என்றால் மலையாளத்தில் அதை இயக்கிய இயக்குநரே இயக்கலாம் என்றேன். மலையாள படத்தில் சில தடங்கல்கள் இருக்கலாம். பட்ஜெட் பிரச்னை இருந்திருக்கலாம். தமிழில் அதை பற்றி கவலைக் கொள்ளாமல், பிடித்ததை செய்யுமாறு இயக்குநர் பத்மகுமாரை கேட்டுக் கொண்டேன்.
அங்கே விட்ட விஷயங்களை அவர் இங்கே சரியாக செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி. வி.பிரகாஷின் இசையும், யுகபாரதியின் பாடல் வரிகளும் சரியான பலம். பொதுவாக ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் அந்த படம் சரியாக வராவிட்டால் தயாரிப்பாளர் என்ற இடத்தில் என் பெயரும், என் நிறுவனத்தின் பெயரும் வர வேண்டாம் என்று சொல்லி விடுவேன். இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன். நன்றாக இருந்தது. பிடித்திருந்தது. என் பெயரை தாராளமாக போடுங்கள் என்று சொல்லி விட்டேன். படம் நன்றாக இருக்கிறது.
உங்களுக்கும் பிடிக்கும்'' என்றார் இயக்குநர் பாலா.