விடு ரைட்...!
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பலரும் பாராட்டி முடித்ததும் சகோதரர்களின் ஏற்புரை.
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பலரும் பாராட்டி முடித்ததும் சகோதரர்களின் ஏற்புரை.
முதலில் ஆர்வில் ரைட் பேச வந்தார். அனைவரும் ஆவலுடன் என்ன பேசபோகிறார் என பார்க்க, ""எனக்கு அவ்வளவாக பேசத்தெரியாது நன்றி இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்'' என்றார்.
அவர் உரையைக் கேட்க ஆவலாக இருந்தவர்கள் சற்றே ஏமாற்றத்துடன், சரி.. இன்னொரு சகோதரர் வில்பரைட் என்ன பேசப் போகிறார் என ஆவலுடன் கவனித்தனர். அடுத்து வந்த வில்பரைட் இப்படி பேசினார்:
""நான் என்னவெல்லாம் பேசவேண்டும் என நினைத்து வந்தேனோ அதையே என் சகோதரர் ஆர்வில் பேசிவிட்டதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன் நன்றி.''