முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

8 ஆண்டுகளுக்குப் பின்னர்...

நானி நடிக்கும் தெலுங்கு படமான  "அன்டே சுந்தரனக்கி' படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

நானி நடிக்கும் தெலுங்கு படமான  "அன்டே சுந்தரனக்கி' படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா. இந்தப் படம்  "அடடே சுந்தரா' என்ற தலைப்பில் தமிழிலும் வெளியாகிறது. 2014- ஆம் ஆண்டு வெளிவந்த  "திருமணம் எனும் நிக்ஹா'  தான் நஸ்ரியா தமிழில் நடித்த கடைசி படம். இப்போது 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறார். 

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமணக் குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக  நானி நடித்திருக்கிறார்.  அவர் காதலிக்கும் கிறிஸ்தவப் பெண் லீலா தாமஸாக நஸ்ரியா நடித்திருக்கிறார். இந்தக் காதலை இரு குடும்பமும் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கதை. படத்தில் பகத் பாசில்,  நதியா, ஹர்ஷவர்த்தன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக் ஆத்ரேயே இயக்கி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.