முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

முதன்மைப் பாத்திரத்தில்...

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலாபால் வரிசையில் கதையின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார்  சுனைனா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:


நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலாபால் வரிசையில் கதையின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார்  சுனைனா.  படத்தின் தலைப்பு ரெஜினா. இந்தப் படத்தை சதீஷ் நாயர் இசையமைத்து தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

""எனது நண்பரும்,  இயக்குநருமான டோமின் டி சில்வா படத்தின் கதையை எனக்கு கூறினார். அப்போது தான் இந்தப் புதிய முயற்சியில் இறங்கலாம் என்று தோன்றியது. எனக்கு என்னுடைய இசைத்திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டும், அதைவிட ஒரு நல்ல கதையும் வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் வந்ததால் இந்தப் படம் உருவாகியது.

இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் யார் என்று பார்த்தபோது, அப்பாவியான முகமும் இருக்க வேண்டும், அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடிய விதமாகவும் இருக்க வேண்டும். அதற்கு சுனைனா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்பாவித்தனம் அவர் முகத்தில் நிலைத்து இருக்கும்.

நிவாஸ் ஆதித்யன் வில்லனாக நடிக்கிறார். அனந்த் நாக் சுனைனாவின் கணவராக நடிக்கிறார்.  சராசரியான குடும்பப் பெண் காணாமல் போன கணவனைத் தேடும் கதை. பணம் பலம், ஆள் பலம் இப்படி எந்த ஒரு உறுதுணையும் இல்லாமல் எப்படி சாதிக்கிறார் என்பது படத்தின் கதை'" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.