அதிசய வாழை மரம்...!
வாழையின் நடு மரத்தில் குலை தள்ளினால் வியப்புதான்!
வாழையின் நடு மரத்தில் குலை தள்ளினால் வியப்புதான்! சென்னை சாலிகிராமம் தேவராஜ் நகரில் உள்ள அனந்தகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓரத்தில் சிறிதளவு இடத்தில் சிறிய தோட்டத்தை குடியிருப்புவாசிகள் அமைத்து பராமரித்துவருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக, வாழை மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் கடந்த சில ஆண்டுகளாக குலை தள்ளி, ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையறிந்த அந்தப் பகுதியினர் அதிசய வாழை மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, செல்கின்றனர்.