முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி  நடிக்கும் படம் "கட்டா குஸ்தி'. இதை "சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை இயக்கிய செல்லா அய்யாவு எழுதி இயக்குகிறார்.

Updated On : 13 நவம்பர், 2022 at 5:49 PM
பகிர்:

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி  நடிக்கும் படம் "கட்டா குஸ்தி'. இதை "சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை இயக்கிய செல்லா அய்யாவு எழுதி இயக்குகிறார்.  தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரிக்கிறார். இது "கோதா' என்ற கன்னடப் படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து விஷ்ணு விஷால் பேசும் போது..... ""கட்டா குஸ்தி' என்பது, மணல் தரையில் விளையாடும் மல்யுத்தம். 

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அது விளையாடப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் இப்படம் உருவாகிறது. கன்னடப் படமான "கோதா'வும் குஸ்தியை பின்புலமாக கொண்ட படம் என்றாலும், அந்த கதை வேறு, இந்த கதை வேறு. இது "கோதா' படத்தின் ரீமேக் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பே இக்கதையை இயக்குநர் செல்லா அய்யாவு என்னிடம் சொல்லியிருந்தார். அதிகமான பட்ஜெட் தேவைப்பட்டதால் இவ்வளவு நாள்கள் காத்திருந்தோம். பொள்ளாச்சி, கோட்டயம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நிஜ கட்டா குஸ்தி வீரர்கள் 50 பேர் என்னுடன் நடித்துள்ளனர். நானும் தேவையான பயிற்சி பெற்று நடித்துள்ளேன். 

கட்டா குஸ்தி வீரர்களின் தற்போதைய நிலமை, அவர்களின் பிரச்னைகள் குறித்து சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இப்படம் கட்டா குஸ்தியை மையப்படுத்தினாலும், இது ஸ்போர்ட்ஸ் மூவி கிடையாது. ஒரு கணவன், மனைவிக்கு இடை யிலான அன்பையும், விரிசலையும் சொல்லும் இப்படத்தில் காமெடியும், ஆக்ஷனும் கலந்திருக்கும். தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது'' என்றார். 

Advertisement

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.  ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.