ஞாயிறு கொண்டாட்டம்

முதல் ஸ்னூக்கர் சினிமா

மலர் மூவி மேக்கர்ஸ்  நிறுவனம் தயாரித்து வரும் படம் "சஞ்ஜீவன்'. இயக்குநர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் எழுதி, இயக்குகிறார்.  

தினமணி


மலர் மூவி மேக்கர்ஸ்  நிறுவனம் தயாரித்து வரும் படம் "சஞ்ஜீவன்'. இயக்குநர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் எழுதி, இயக்குகிறார்.  வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படம் குறித்து இயக்குநர் மணி சேகர் பேசும் போது...... 

"" பாலுமகேந்திராவின் மாணவர் என்பதால் படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.  சஞ்ஜீவன் என்ற தலைப்புக்கு அழிவற்றன் என்று பொருள். இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு. இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து இறைந்து  கிடக்கிறது. அப்படித்தான் இது. ஒரு மனிதனின் வாழ்க்கை தொகுப்பு. பெரிய திட்டமிடல் இருந்தது.  
எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும்,  நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுறேன்.''  என்றார் இயக்குநர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT