முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அஜினோமோட்டோ

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி வரும் படம்  "அஜினோமோட்டோ'.  ஆர். எஸ். கார்த்திக், காயத்ரி ரேமா,  அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:


அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "அஜினோமோட்டோ'. ஆர். எஸ். கார்த்திக், காயத்ரி ரேமா, அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார். தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ""அஜினோமோட்டோ' என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம்.

இதனை மையப்படுத்தி "அஜினோமோட்டோ' படத்தின் கதை தயாராகியிருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை என்றார் இயக்குநர்.

அஜினோமோட்டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறும் நாயகனின் தோற்றமும், இணையத்தில் வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.