எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொருள் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறாக, எந்தப் பொருளை எங்கு வாங்கலாம் பார்ப்போம்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொருள் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறாக, எந்தப் பொருளை எங்கு வாங்கலாம் பார்ப்போம்.
- திருநெல்வேலி - அல்வா
- ஸ்ரீவில்லிபுத்தூர்-பால்கோவா
- கோவில்பட்டி-கடலைமிட்டாய்
- கடம்பூர்- போளி
- மணப்பாறை- முறுக்கு
- பண்ருட்டி - பலாப்பழம்
- மார்த்தாண்டம் - தேன்
- பவானி - ஜமுக்காளம்
- உசிலம்பட்டி - ரொட்டி
- நாச்சியார்கோவில் - விளக்கு,
- பித்தளைவெண்கலப் பொருள்கள்
- பொள்ளாச்சி - தேங்காய்
- வேதாரண்யம் - உப்பு
- சேலம் - எவர்சில்வர், மாம்பழம்,
- அலுமினியம்
- சாத்தூர்- காராசேவு, மிளகாய்
- மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
- மாயவரம் - ஏர்கலப்பை, காபி பில்டர்
- திருப்பூர்- பனியன், ஜட்டி
- உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை
- கும்பகோணம் - வெற்றிலை, சீவல், பித்தளை- வெண்கலப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்
- தருமபுரி - புளி, தர்ப்பூசணி
- தூத்துக்குடி-உப்பு
- ஈரோடு - மஞ்சள், துணி
- தஞ்சாவூர்- கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை, ஓவியங்கள், நெட்டியிலான பொருள்கள்
- நீலகிரி - தைலம், கைத்தொழிலில் தயாரான சாக்லெட்
- உதகை - உருளைக்கிழங்கு, காரட், காய்கறிகள், ஹோம்மேட் சாக்லெட் தேயிலை, வர்க்கி
- கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
- காரைக்குடி- ஓலைக்கூடை, கண்டாங்கிச் சேலை
- செட்டிநாடு-பலகாரம்
- பட்டுக்கோட்டை- தேங்காய் பாக்கு
- திருபுவனம் - பட்டுப் புடவை
- குடியாத்தம் - நுங்கு, பீடி, தீப்பெட்டி, லுங்கி, தங்க நகைகள், பால்கோவா
- கொள்ளிடம் - பிரம்புப் பொருள்கள்
- ஆலங்குடி-நிலக்கடலை
- கரூர்-கொசுவலை
- திருப்பாச்சி - அரிவாள்
- காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
- நாகப்பட்டினம் - கோலா மீன்
- திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
- பத்தமடை-பாய்
- பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
- உடன்குடி - கருப்பட்டி
- கவுந்தாம்பட்டி-வெல்லம்
- ஊத்துக்குளி - வெண்ணெய்
- கொடைக்கானல் - பேரிக்காய்
- குற்றாலம் - நெல்லிக்காய்
- செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
- சங்கரன்கோவில் - பிரியாணி
- அரியலூர்-கொத்தமல்லி
- சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
- கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
- திருச்செந்தூர் - கருப்பட்டி
- குளித்தலை-வாழைப்பழம்
- ஆம்பூர், வாணியம்பாடி - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்
- ஒட்டன்சத்திரம்- முருங்கைக்காய், தக்காளி
- ஓசூர்-ரோஜா
- நாமக்கல் - முட்டை
- பல்லடம் - கோழி
- குன்னூர் - கேரட்
- விருதுநகர் - பரோட்டா
- திருச்சி - லாலா கடை பூந்தி