முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஒரு கோடை மர்டர் மிஸ்டரி

விருமாண்டி' படப் புகழுக்குப் பின் டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் மெகா தொடர்களில் கவனம் செலுத்தி வந்த  நடிகை அபிராமி இணையத் தொடருக்கு திரும்பியிருக்கிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

"விருமாண்டி' படப் புகழுக்குப் பின் டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் மெகா தொடர்களில் கவனம் செலுத்தி வந்த  நடிகை அபிராமி இணையத் தொடருக்கு திரும்பியிருக்கிறார். "ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் தற்போது ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இதற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டு, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. விஷால் வெங்கட் இயக்கத்தில் தயாராகி இருக்கும் த்ரில்லர் பாணியிலான இணைய தொடர் "ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'. என். பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இந்த இணையத் தொடரில் விருமாண்டி படப் புகழ் அபிராமியுடன்  குழந்தை நட்சத்திரங்களான ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பி. எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு சுதர்சன் எம். குமார் இசையமைத்திருக்கிறார். "அயலி', "செங்களம்' ஆகிய பிரம்மாண்ட வெற்றியை அளித்த ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் இந்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. 

இதனை சொல் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் ஃபாசிலா அல்லானா மற்றும் கம்னா மெனேசஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் பேசுகையில், "" பாடசாலையில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட மாணவன் வியோம் வரதராஜ். அவனுக்கு தன்னுடன் "விநாடி வினா' போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய தாரா என்ற மாணவி மீது ஈர்ப்பு வருகிறது. இருவரும் சந்திக்க திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள். 

அதைத் தொடர்ந்து தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாராவின் மரணத்தால் உடைந்து போகும் வியோம், தனது நண்பர்கள் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது? என்பதனை கண்டுபிடிக்க முயல்கிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் பாடசாலை மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான புலனாய்வு த்ரில்லர் படைப்பாக இந்த இணைய தொடர் உருவாகியுள்ளது'' என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →