பிரபுதேவாவின் 60-ஆவது படம்
ரபுதேவாவின் 60-ஆவது படமாக உருவாகி வருகிறது "வுல்ப்'. அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரபுதேவாவின் 60-ஆவது படமாக உருவாகி வருகிறது "வுல்ப்'. அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னட சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. எஸ். ஜே. சூர்யாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றி "சிண்ட்ரெல்லா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வினு வெங்கடேஷ் இந்தப் படத்தை கதை எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது..."" தனிமைக்கும், கூட்டத்துக்குமான மோதல் எப்போதும் நிகழ்ந்து வருவதுதான். இங்கேயும் அப்படித்தான் தனித்த ஓநாய் ஒன்றுக்கும், கூட்டமாகச் செயல்படும் ஓநாய் ஒன்றுக்குமான மோதலாக கதை சித்தரித்திருக்கிறேன். வசியம் செய்பவர்கள் பற்றி செய்தித்தாள்களில் அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதை பின் தொடர்ந்து சில கற்பனைகளை கலந்து சினிமாவுக்கான கதை பிடித்திருக்கிறேன்.
வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைவுக்கதையான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தமானில் கதை நிகழ்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.