சாமானியர்களின் குறிப்புகள்
ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சீரன்.
ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சீரன். ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் துரை கே. முருகன். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....
"இளைஞர்களிடம் பெரும் மாற்றத்தை இந்தப் படம் உருவாக்கும். இந்த சமூகத்தில் நடந்துக் கொண்டிருக்கிற எல்லா நடப்புகளையும் இது விவாதிக்கும். நடந்து வந்த பாதையை, கடந்து போனதை, பார்க்க மறந்து போனதை எல்லாம் சேர்த்தே பேசியிருக்கிறோம். வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் நடக்கிற கதை. சாதியின் அம்சங்கள் குறித்தும் சார்ந்தும் இருக்கிற திரைக்கதை. அதிலிருந்து மனித உணர்வுகள், மதிப்பீடுகள் என்று வெளியே கொண்டு வந்திருக்கிறேன். மனிதர்களை பிரித்து வைக்கிற சாதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எல்லரும் ஒன்று சேர்ந்து ஒரு உண்மையை விவாதித்தோம்.
அதில் சினிமாவுக்கு ஏற்ற சங்கதிகள் நுழைத்து வைத்திருக்கிறோம். இங்கே இருக்கிற அத்தனை பேருமே இந்த கதையை இனம் காண முடியும். சுருக்கமாக சொல்லப் போனால் நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படம். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சாமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம்'' என்றார்.