ஞாயிறு கொண்டாட்டம்

டேக்வாண்டோவில் அசத்தல்

தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.

சுஜித்குமார்


தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.

இந்திய டேக்வாண்டோ சங்கம், தெலங்கானா மாநில டேக்வாண்டோ சங்கம் ஆகியன சார்பில் ஹைதராபாதில் 7-ஆவது தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14 வயதில் இருந்து பல்வேறு வயதுப் பிரிளகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யு.ஏ.இ.யைச் சேர்ந்த 1,000-கக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஸ்பேரிங், பவர் பிரேக்கிங், செல்ஃப் டிபன்ஸ் உள்ளிட்ட பிரிளகளில் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கலந்துகொண்டனர்.

ஸ்பேரிங் பிரிவில் குருஷந்த், திபேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அனீஸ், மிதுன் ஆகியோர் அதே பிரிவில் தலா 1 வெள்ளியை கைப்பற்றினர்.

இன் பேட்டர்ன் பிரிவில் திபேஷ், குருஷந்த் தலா 1 வெண்கலமும், ஸ்பேரிங் பிரிவில் தேவராஜ், சந்துரு தலா 1 வெண்கலமும் வென்றனர். தெற்கு, மேற்கு இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 34 பேர் பங்கேற்றனர். இதில் தமிழக அணியினர் 6 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.

சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு எம்.கே. சுரேஷ் குமரன், மஞ்சுளா தேவி ஆகியோர் தீவிர பயிற்சியை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திரத்தில் ‘மோந்தா’ புயல்! முதல்வா் சந்திரபாபுவுடன் பிரதமா் ஆலோசனை!

இன்று கரையைக் கடக்கிறது ‘மோந்தா’ புயல்: திருவள்ளூருக்கு பலத்த மழை எச்சரிக்கை

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி

எஃப்1 காா் பந்தயம்: லாண்டோ நோரிஸுக்கு 6-வது வெற்றி!

SCROLL FOR NEXT