சென்னை உலகப் பட விழா
சென்னையில் நடைபெற்ற உலகப் பட விழா சினிமா ரசிகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. சினிமாவை காண வருபவர்களுக்கு கட்டணம் இல்லா நுழைவு என்பது இந்த விழாவின் சிறப்பம்சமாக இருந்தது.
சென்னையில் நடைபெற்ற உலகப் பட விழா சினிமா ரசிகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. சினிமாவை காண வருபவர்களுக்கு கட்டணம் இல்லா நுழைவு என்பது இந்த விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர் உலக சினிமா பாஸ்கரன் பேசும் போது.... "" உலக அளவில் கவனம் ஈர்தத் சுமார் 15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது.
தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய "அடவி' என்ற மெளன படம் இவ்விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்பட்டன. அதுமட்டுமின்றி முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து சென்னை உலக சினிமா விழாவில் அவரது படங்கள் திரையிடப்பட்டன.
திரைப்பட விழாவில் படங்களை காண வந்த பார்வையாளர்களுக்கும் கட்டணம் இல்லை. இந்த விழாவிற்கான அனைத்து செலவுகளும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நடத்தப்பட்டது. மேலும் வெள்ளிமலை, இராவண கோட்டம் போன்ற படங்களும் ஃபெஸ்டிவல் வெர்ஷன் என்ற பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட படங்கள் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது அவற்றில் இருந்து 15 படங்களைத் தேர்வு செய்து திரையிட்டு காட்டினோம். மு. கருணாநிதி கதை வசனம் எழுதி சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் பிரதானமாக திரையிடப்பட்டது.
Advertisement
இந்த விழாவில் குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சி பட்டறையை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான விக்னேஷ் குமுளை,நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்தினார்கள். இருவரும் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை பெற்று வரும் கூழாங்கல் மற்றும் கற்பரா திரைப்படத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.