ஞாயிறு கொண்டாட்டம்

எளிய மனிதனுக்கான அதிகாரம்!

மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை.

அசோக்

மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது.

ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த சினிமாவில் அந்த மேஜிக் நடந்து கைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். சினிமாவின் இலக்கணம் அறிந்து பேசுகிறார் இயக்குநர் சாச்சி. 'சட்டம் என் கையில்' படத்தின் கதையோடு வருகிறார். ஏற்கெனவே 'சிக்சர்' படத்தை இயக்கியவர்.

'சட்டம் என் கையில்'... கமல் ஹிட் பட டைட்டில்... இங்கே எப்படி...

இந்தக் கதைக்கு அது பொருத்தமாக இருந்தது. கமல் சாரை அணுகி கேட்டோம். 'அந்தப் படத்தின் தயாரிப்பாளரை கேட்டு கொள்ளுங்கள்..' என்றார். தயாரிப்பாளர் பாலு சாரிடம் கேட்டோம். லைன் கேட்டு விட்டு 'பொருத்தமான தலைப்பு எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார். அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மைப் படுத்தி எடுக்கிறது. கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க அதிகாரம் படைத்தவர்கள முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள்.

அதிகாரம் படைத்தவர்களின் தூரத்து சொந்தங்களுக்கு கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸýம் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரி கடலை விற்கும் கிழவனை கொண்டு போய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்து துன்புறுத்தும்.

நேற்று வரை ஒன்றரையணாவுக்கு பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்.... கார், அடியாள்கள், செல்வாக்கு என பறக்கிறார்கள்... இதையெல்லாம் சாலையில் நின்று பார்க்கும் சாமானியன் பார்வையில் இதை எழுதியிருக்கிறேன்.

கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாம்...

வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம்.

இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். இப்படியாக ஒரு சின்ன வழக்குக்காக ஒரு நாள் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். அங்கே நடந்ததது என்ன? அதன் சுவாரஸ்ய பக்கங்கள் எது? இதுதான் லைன். காவல் துறையினரின் மனநிலை... அதிகாரம் முன் ஒன்று செய்ய முடியாத எளியவன்... இந்த இரண்டு பக்கமும் கதை பயணமாகும். அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது.

லைன் ஓ.கே... ரசிகர்களிடம் கதை பேசப் போவது என்ன...

கேரளக் காவல் துறையில் பல ஆண்டுகள் போலீஸ் வேலை பார்த்த ராமச்சந்திர நாயர் என்பவர் எழுதிய நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி என்ற புத்தகம். அப்படி இருக்கும்... புரட்சியாளன் நர்கீûஸ, மேலதிகாரிகளின் குரூரமான வற்புறுத்தலால் தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக எழுதப்பட்ட பதிவு அது. பெண் காவலர் ஒருத்தி, போலீஸ் வேலை கிடைத்த தருணத்தில் என்னென்ன நினைத்திருப்பாள். போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களையும் பார்த்திருக்கலாம்.

ஆனால், இங்கே நிறைய பேருடைய மனிதத்தை அதிகாரமும், அரசியலும் தின்று விடுகின்றன. அரசியலும், சாதியும், பணமும் காவல் துறையை இயக்கிக் கொண்டு இருக்கிற வரை உன்னதமான பாதுகாப்பை நம்மால் உணரவே முடியாது. மேல் அதிகாரிகளால் முதல் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தாலும், கேவலமான அரசியல்வாதிகளாலும் காக்கிகளின் மனிதம் இங்கே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்படி பல விஷயங்கள் மீது பொது விவாதங்களை எழுப்புவதாக இருக்கும் இந்தக் கதை.

காமெடி நடிகர் சதீஷ்... இதில் எப்படி பொருந்தி வருகிறார்...

ஏதேச்சையாக அவரிடம் பேசும் போது இந்த லைன் பற்றி சொன்னேன். கொஞ்ச நாள்களுக்கு பின் இதை நாமே செய்தால் எப்படி இருக்கும்... என்றார்.

இப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது. வழக்கமான படமாக இது இருக்காது. இந்திய சினிமாவில் மலையாள சினிமாவின் தாக்கம் என்பது பெருசு. அதை முன் மாதிரியாக கொண்டு... அப்படியே செய்திருக்கிறேன். ஒரு காமெடி வந்து முடிந்ததும், அடுத்து பாட்டு என்பது மாதிரி நான் யோசிக்கவில்லை. கதைக்கு எது நியாயமோ அதுவே கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ஹீரோயின் இல்லாமல் இப்போது கதையை யோசிக்க முடியாது. அதை வம்படியாக திணிக்காமல் கதையின் தேவை உணர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அஜய் ராஜ், பாவெல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, பாவா செல்லதுரை... இப்படி எல்லோருக்கும் தெரிந்து முகங்களை மற்ற இடங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். அது போல் நம்பிக்கையான தொழில்நுட்பக் கலைஞர்கள் தோள் கொடுத்திருக்கிறார். எல்லாம் சரியாக நடந்தால். இது நிச்சயம் ஹிட் அடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT