குற்றம் குறை 
ஞாயிறு கொண்டாட்டம்

காக்கிகளின் மனிதம்

கால பைரவா மூவிஸ் மற்றும் எஸ். கே. எஸ். ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் 'குற்றம் குறை'.

DIN

கால பைரவா மூவிஸ் மற்றும் எஸ். கே. எஸ். ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் 'குற்றம் குறை'. லூகாஸ் கனகராஜ், யசோதா, மீசை ராஜேந்திரன், கிருஷ்ணாப்பா, ஆர்மி லண்டன் ஸ்ரீராமுலு, வந்தவாசி சுப்பிரமணி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் விஜய் திருமூலம். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...''எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குற்றம் செய்பவர்கள் இதற்கு விதி விலக்கல்ல. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீஸ், அவர்களின் கடமையை சரி வர செய்வதென்பது குதிரை கொம்பாக உள்ளது.

இங்கே அப்படி ஒரு போலீஸ் எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. நேர்மையாகச் செயல்பட நினைக்கும் அந்த அதிகாரிக்கு ஆயிரம் சவால்கள். அதிலிருந்து அவர் எப்படி விடுபட்டு நேர்மையைப் பரிசாகப் பெற்றார் என்பதே கதை. இங்கே அற்புதமான அதிகாரிகளின் மனிதத்தை அரசியலும் சாதியும் தின்று விடுகின்றன.

அரசியலும் சாதியும் பணமும் காவல் துறையை இயக்கி கொண்டிருக்கிற வரை நம்மால் உரிய பாதுகாப்பை உணர முடியாது. அதுவும் மேல் அதிகாரிகளால் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

அதிகாரத்தாலும், கேவலமான அரசியல்வாதிகளாலும் காக்கிகளின் மனிதம் இங்கே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி பல விஷயங்களை இது இந்த சமூகத்தின் பார்வைக்கு வைக்கும். அது போல் திருநங்கைகளின் வாழ்க்கையும் இதில் பதிவாகியுள்ளது'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூக்குத்தி அம்மன் 2: முதல்பார்வை போஸ்டர்!

மேட்டூர் அணை நிலவரம்!

துபை டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்..! அதிகபட்ச தொகைதான் காரணமா?

முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்னையா? சரிசெய்ய இயற்கையான வழி இதோ!

கரூர் சம்பவ விசாரணை ஆணையம் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன?: கே. அண்ணாமலை கேள்வி

SCROLL FOR NEXT