வி.கே. புரொடக்ஷன்ஸ் குழுமத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'படையாண்ட மாவீரா' கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கெளதமன். சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி, இளவரசு, பூஜிதா, மன்சூரலிகான், 'ஆடுகளம்' நரேன், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து வ. கௌதமன் பேசும் போது...
'என் படைப்பின் வழியாக நம் முன்னோர்கள் வரிûப்படுத்தப்படுவார்கள். என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி ஒரு தரிசனமாக இவ்வுலகிற்கு தருவது மட்டும்தான்.
சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். அதற்கு இந்த தமிழ்ச் சமூகம் தந்த வரவேற்பை மறக்க மாட்டேன். முந்திரிக்காடும் வன்னிக்காடும் மட்டுமே மீதமுள்ளது. தமிழ் மண்ணில் ஆகப் பெரும் பேரதிர்வுகளை உருவாக்கப் போகும் இப்படைப்பு உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒருத்தாய் மக்களாக நில்லுங்கள் என்று உரக்கப் பேச வருகிறது.
'மாவீரம்' சுமந்த இப்பெரு வரலாற்றின் படப்பிடிப்பு இதுவரை 76 நாட்கள் நடைபெற்று மீதமுள்ள ஐந்து நாட்கள் மெய்சிலிர்க்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படையாண்ட மாவீரா குழு தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் உங்களை திரையில் சந்திக்க வருகிறேன் என உற்சாக நெகிழ்வோடு பேசுகிறார் வ. கௌதமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.