ஞாயிறு கொண்டாட்டம்

வித்தைக்காரன்

மாயாஜால கதையின் பின்னணி!

DIN

ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வரும் படம், "வித்தைக்காரன்'. அறிமுக இயக்குநர் வெங்கி எழுதி இயக்குகிறார். யுவகார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் நாயகனாக நடிக்கும் இதில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....

'திரைக்கதைக்கான பயணத்தின் போது ஒரு விஷயம் என் கவன்ததுக்கு வந்தது. அது ஒரு உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது. அதிசயதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா.. என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாக தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன.

அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான் இது. ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம்.

ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். விமான நிலையத்தில் சிக்கி இருக்கும் ரூ.25 கோடி மதிப்புள்ள வைரத்தை மூன்று குழு கைப்பற்றத் திட்டமிடுகிறது. அது யாரிடம் சிக்கியது என்பது கதை. இதில் 2 வேடங்களில் சதீஷ் நடிக்கிறார். ஒரு கேரக்டர் மேஜிக்மேன். இதற்காக அவருக்கு மேஜிக் கற்றுள்ளார்.

இன்னொரு கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ். முக்கியமான காட்சிகள் விமான நிலையத்தில் நடக்கின்றன. அந்தக் காட்சிகள் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் படமாக்கப்பட்டது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்! காரணம் என்ன?

மூக்குத்தி முத்தழகு... ராய் லட்சுமி!

உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது...ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

SCROLL FOR NEXT