நாயகன், குணச்சித்திரம், வில்லன் என்று இதுவரை தான் நடித்த பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்துள்ள செளந்தரராஜா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள படம் "சாயாவனம்'.
இப்படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சாயாவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு திரையிடப்பட்டது. அதே போன்று சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் கவனத்தை ஈர்த்தது. மலையாள இயக்குநர் அனில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தேவானந்தா, அப்புக்குட்டி, "கர்ணன்' புகழ் ஜானகி, சந்தோஷ் தாமோதரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய செளந்தரராஜா, "முழுக்க முழுக்க மலை, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இதுவரை ஏற்றிராத சவாலான பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டன. இடைவிடாது மழை பெய்யும் மலைப்பகுதியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் மையக்கரு. மிகுந்த சிரமங்களுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்றது.
நான் நடித்துள்ள பாத்திரத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி இருந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் எங்கள் கடின உழைப்பு பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார். அருள்நிதி நடிக்கும் திரைப்படத்திலும் மலையாள திரைப்படம் ஒன்றிலும் செளந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.