தேன் நிலவு...
கல்யாண ஜோடிகளுக்கான சிறந்த கோடை வாசஸ்தலங்கள்!
கல்யாண சீசன் முழு மூச்சாக தற்போது நடைபெறுகிறது. புது திருமண ஜோடியினர் இருவரும் வேலைக்குச் செல்வது சகஜமாகிவிட்டதால், அவர்களுக்கு பணம் பிரச்னையல்ல; ஏதாவது ஒரு கோடை வாசஸ்தலம் சென்று குளிர், திடீர் மழை, கண்களுக்கு விருந்தாகும் இடங்கள்.. என ரசித்துவிட்டு திரும்ப விரும்புகின்றனர்.
இப்போது அவர்களுக்கு தேவை எந்த இடத்துக்குச் சென்று வரலாம் என்பது குறித்த டிப்ஸ். இவை எல்லாமே கோடை வாசஸ்தலங்கள்தான். தங்கும் இடம், உணவு, சுற்றிப் பார்க்க வசதி.. என எல்லாமே இங்கெல்லாம் உண்டு.
ஹேவ்லாக் தீவு
Advertisement
அந்தமான் தீவுகளில் ஒன்று. சென்னையிலிருந்து பெர்ரி படகில் எளிதில் சென்றடையலாம். இங்கு டைவ் அடித்து குளிக்க வசதி உள்ளது. அழகான யானை கடற்கரை. பவழப் பாறைகள், இயற்கை கொஞ்சும் சுற்றுச்சூழல், சுத்தமான கடற்கரைகள் என தனிமைக்கு நல்லதொரு இடம். போர்ட் ப்ளேயருடன் இணைந்து மூன்று நாட்கள் பயண கட்டணம் ரூபாய் 15 ஆயிரம் முதல் உள்ளது.
சிம்லா
ஹிமாச்சல் மாநிலத் தலைநகரம். ரூ. 2 ஆயிரம் முதல் வாடகைக்கு தங்க விடுதிகள் கிடைக்கும். சுற்றிலும் அழகான மலைகள், திடீர் மழை, உள்ளூர் சுற்றுலாத் தலங்கள் என ஏராளம் உண்டு.
ஸ்ரீநகர்
ஜம்மு - காஷ்மீரின் கோடைகால தலைநகரம். தால் ஏரி, முகலாயத் தோட்டம், துலிப் தோட்டம், சங்கராச்சாரியார் கோயில், படகு வீடு உள்ளிட்ட சிறப்புகள் உள்ளன.
கைவினைப் பொருள்கள், உலர்ந்த பழங்கள் நிறைய உள்ளன. ஏப்ரல்-அக்டோபர் சுற்றிப் பார்க்க சிறந்த நேரம். ஜம்முதாவி ரயில் நிலையத்திலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளது.
மணாலி
வடக்கு இமாசலத்தில் 2,050 மீ. உயரத்தில் அமைந்துள்ள நகரம். இங்கு இடும்பா, மனு, கோயில்கள் உள்ளன. பனி விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகளுக்கு மிகச் சிறந்த இடம். ஜூன், ஜூலை சிறந்த பயணத்துக்கு ஏற்ற நேரம்.
முசோரி
உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் நகரிலிருந்து 35 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு கோடை வாசஸ்தலம். அழகான மலைகளைக் கொண்டுள்ளதால், "மலை
களின் ராணி' என அழைப்பர். கர்வால் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது. பல நீர்வீழ்ச்சிகள் பள்ளத்தாக்குகள், ஏரிகள், அருகில் உள்ள லால்திப்பா 2,346 மீ. சென்றால் அங்கிருந்து கோதார்நாத், பத்ரிநாத் இருப்பிடங்களைத் தரிசிக்கலாம்.
குல்மார்க்
ஸ்ரீநகர் அருகில் உள்ளது. குளிர் கால விளையாட்டுகளின் இதயப் பகுதி. இங்குள்ள அபர்வத் சிகரம் பனி சறுக்கு பிரியர்களுக்கு ஏற்ற இடம்.
மூணாறு
முதிரப்புழ, நல்லதண்ணி, குண்டா மலைகள் இணைப்பில் மூணாறு அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள ஆனைமுடி மலைஏற்றத்துக்கு சிறந்த இடம். பரந்தத் தேயிலை தோட்டங்கள், வளைவுப் பாதைகள் ரசிக்கத் தக்கவை. ரம்மியமான சூழல். இளம்ஜோடிகளுக்கு வரப்பிரசாதம்.
கோவா
1961-ஆம் ஆண்டு டிச. 19-இல் இந்தியாவுடன் இணைந்தது. அதற்கு முன் போர்த்துகீசியர் ஆட்சி. அவர்கள் கலையில் எழுந்த சர்ச், கட்டடங்கள் சிறப்புடன் இப்போதும் உள்ளன. பல கோட்டைகள் பல பீச்சுசுகள், இந்து கோயில்கள் பார்க்கவுள்ளன. நிறைய வெளிநாட்டு பயணிகள் வருவர்.