VectorStock.com/24314817
ஞாயிறு கொண்டாட்டம்

அறுபத்து ஐந்து வயதைக் கடந்தவரா?

அறுபத்து ஐந்து வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான முக்கிய பாதுகாப்பு வழிகாட்டிகள்

எம். அசோக்ராஜா

அறுபத்து ஐந்து வயதைக் கடந்தவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

கூடுமானவரை துணை இன்றி, படிகளில் ஏறாதீர்கள்.

வேகமாகத் திரும்பாதீர்கள்.

கால் பாதத்தைத் தொடுமாறு குனியாதீர்கள்.

நின்றவாறு கால்சட்டையை மாட்டிக் கொள்ளாதீர்கள்.

எதையும் பிடிக்காமல் மல்லாக்கப் படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதற்கான பயிற்சிகளைச் செய்யாதீர்கள்.

இடுப்பை இடமும் வலமுமாகத் திருப்பாதீர்கள்.

பின்புறமாக நடக்காதீர்கள்.

எடை கூடிய பொருள்களைக் குனிந்து தூக்காதீர்கள்.

படுக்கையில் இருந்து எழும்போது உடனடியாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ செய்யாதீர்கள்.

எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துகொண்ட உணவானது தானாக இறங்கும்.

சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாகப் பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.

-கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்கமாகக் கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.

திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாகக் சுழற்றுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT