கேலக்ஸி 
ஞாயிறு கொண்டாட்டம்

விண்மீன் திரள்கள்

'கேலக்ஸி' என விண்மீன் திரள்கள் 1,000 முதல் 100 டிரில்லியன் நட்சத்திரங்கள் வரையில் கொண்டவை. சிறியதை 'குள்ளன்' என்றும் பெரியவற்றை 'ஜெயின்ட்' எனவும் அழைப்பர்.

ராஜிராதா

'கேலக்ஸி' என விண்மீன் திரள்கள் 1,000 முதல் 100 டிரில்லியன் நட்சத்திரங்கள் வரையில் கொண்டவை. சிறியதை 'குள்ளன்' என்றும் பெரியவற்றை 'ஜெயின்ட்' எனவும் அழைப்பர்.

பொதுவாக, விண்மீன் திரள்கள் என்பது நட்சத்திரங்கள், விண்மீன் எச்சங்கள், விண்மீன்களுக்கு இடையில் உள்ள வாயு, தூசி, கரும்பொருள் போன்றவை ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை நீள் வட்டம், சுழல் அல்லது ஒழுங்கற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பால்வெளி சுழல் விண்மீன் வகையை சார்ந்தது. மில்லியன் கணக்காண விண்மீன் திரள்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே நன்கு பிரபலமான பெயர்கள். மற்றவை இனிஷியல்களுடன் கூடிய நம்பர்கள் கொண்டவை. இவற்றின் அதிசயங்களை மேலும் அறிந்து கொள்வதில் நன்மை எதுவுமில்லை. நாமும் நான்கை கண்டுபிடித்ததாக சொல்லிக் கொள்ளலாம். இதுநாள் வரையிலும் எதிலும் நம் மாதிரியாரும் வசிப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை.

நாசா கண்டுபிடித்துள்ள ஏழு மிகப் பெரிய விண்மீன் திரள்கள்:

மாலின்-1 : சுழல் விண்மீன் வகை. 1,20,000 ஒளியாண்டுகள் அகலம் கொண்டவை

என்.ஜி. சி. 6872 : 2,00,000 ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டவை. இதுவும் சுழல் விண்மின் சார்ந்தவை.

யுஜிசி : 2885,2,20,000 ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டவை. மாபெரும் நீள் வட்ட விண்மீன்.

மெஸ்ஸியர் 87 (எம்87) : 2,40,000 ஒளியாண்டுகள்  அகலம் கொண்ட ராட்சத நீள் வட்ட விண்மீன். கன்னி கிளஸ்டரில் ஒளியின் கலங்கரை விளக்கமாக உள்ளது.

ஐசி : 11012,60,000 ஒளி ஆண்டு அகலம். இந்த மாபெரும் நீள் வட்ட விண்மீன் பிரபஞ்சத்தின் மிகப் பெரியவற்றில் ஒன்றாகும்.

மெஸ்ஸியர் 49 (எம்49) : 2,80,000ஒளியாண்டுகள் அகலம் கொண்ட ராட்சத நீள் வட்ட விண்மீன் கன்னிக் கூட்டத்தில் பிரகாசமாக ஜொலிக்கிறது.

மெஸ்ஸியர்-60-(எம்60): 3,00,000 ஒளியாண்டுகள் அகலம் கொண்ட ராட்சத நீள வட்ட விண்மீன் கன்னிக் கூட்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT