முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மர்மப்பட நாயகன் ஆல்ப்ரட் ஹிட்ச்காக் - 125

ஹாலிவுட்டில் மர்மப் படங்களுக்காகவேப் பேசப்பட்ட ஆல்ப்ரட் ஹிட்ச்காக் பிறந்த 125 ஆண்டு இது.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 4:41 PM
ஆல்ப்ரட் ஹிட்ச்காக்
பகிர்:

ஹாலிவுட்டில் மர்மப் படங்களுக்காகவேப் பேசப்பட்ட ஆல்ப்ரட் ஹிட்ச்காக் பிறந்த 125 ஆண்டு இது.

1899-ஆம் ஆண்டில் பிரிட்டனில் பிறந்தவர் ஆல்ப்ரட் ஹிட்ச்காக். இளம் வயதில் குண்டாக இருந்ததால், தன்னிரக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வெளியே வர தயங்கினார். இவர் தனது ஐந்தாம் வயதில், ஒரு தவறு செய்தார். அதற்கு அவரது தந்தை தண்டனையை அளித்தார். எப்படி தெரியுமா? அருகே இருந்த காவல் துறை அலுவலருக்கு கடிதம் எழுதி, அதனை ஹிட்ச்காக் மூலமாகவே அனுப்பினார். அதில், 'ஹிட்ச்காக்கை ஐந்து நிமிடங்கள் சிறைக்குள் வைத்து பூட்டி, பிறகு திறந்து அனுப்பவும்' என்றிருந்தது. இது சிறுவனின் மனதைப் பாதித்தது. இது அவருடைய பிற்காலப் படங்களில் கடுமையான சிகிச்சை, தவறான குற்றச்சாட்டுகள் அடிக்கடி கருப்பொருளாகவும் இருந்தன.

1919-இல் திரைத்துறையில் நுழைந்து ஐந்து ஆண்டுகளில் இணை இயக்குநராக உயர்ந்தார். மௌனப்படம், பேசும்படம், கருப்பு- வெள்ளை, வண்ணப் படங்களையும் இயக்கினார். ஹிட்ச்காக்கின் பத்தாவது படம் 'பிளாக் மெயில்'. இது அவரின் முதல் பேசும் படம். இதன் வெற்றி அவரை

Advertisement

மர்மப் படங்களின் இயக்குநராக மாற்றியது. 60 ஆண்டு திரைத் துறை வாழ்க்கையில், ஐம்பதுக்கு அதிகமான படங்களைத் தயாரித்தார்.

1941-இல் வெளியான 'ஷேடோ ஆஃப் ஏ டவுட்' என்பதே அவருடைய முதல் தயாரிப்புப் படமாகும். பிரபலமாகப் பேசப்பட்ட படங்கள் 'பேர்ட்ஸ்', 'சைகோ' போன்றவையாகும். அவருடைய கடைசிப் படம் 1976-இல் வெளியான 'பேமிலி பைட்' என்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.