பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!
ஜன நாயகன் படம் குறித்து நடிகர் ஜீவா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது...
நடிகர் ஜீவா தனது எக்ஸ் தளத்தில் ஜன நாயகன் படம் இணையத்தில் வெளியானதைக் கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பலரது உழைப்புக்குத் துரோகம் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தனது கடைசி படமாக ஜன நாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்கியிருந்தார். கேவிஎன் புரடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
பொங்கலுக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தள்ளிபோனது. விஜய் அரசியலில் ஈடுபட்டதாலே தனது கடைசி திரைப்படமான ஜன நாயகனுக்கு பாதிப்பு வந்ததாக பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேற்றிரவு 5 நிமிஷ படக் காட்சிகள் வெளியானதக் கூறப்பட்டது. பின்னர், இன்று காலை முதல் ஜன நாயகன் மொத்த படமும் வெளியாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியாகியுள்ளது.
இதனை வெளியிட்டவர்கள், பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பெடுமென படக்குழு வக்கீல் நோட்டீஸ் அளித்திருந்தது. நடிகர் சிவகார்த்திகேயனும் இதற்காக தனது கணடனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் ஜீவா கூறியிருப்பதாவது:
நம்ம தளபதியின் ஜன நாயகன் படம் சட்டத்துக்குப் புறம்பாக இணையத்தில் வெளியானதை அறிந்து மனம் நொந்துவிட்டது. தயவுசெய்து இந்தப் படத்தின் காட்சிகளைப் பகிர்ந்து அதற்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்.
காத்திருந்து, திரையரங்குகளில் மட்டுமே பார்த்து இதனைக் கொண்டாடுங்கள். இது வெறுமனே படம் மட்டுமே அல்ல - இது சில ஆண்டுகளாக தளராத ஆர்வத்துடன் பலரது வியர்வை, ரத்தம் சம்பந்தப்பட்டது. துரோகம் செய்யாதீர்கள்! இதைச் செய்தவர்கள் உடனடியாக அதன் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஜன நாயகன் தள்ளிப்போனதால், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் பொங்கல் வெறியாளராக நடிகர் ஜீவாவை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
Don’t betray it! actor jiiva slammed Jana nayagan leaked on internet
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.