மாண்புமிகு முதல்வர் விஜய்! ஜன நாயகன் திரைப்பெயர் இதுதான்!
ஜன நாயகனில் முதல்வர் விஜய்யின் திரைப்பெயர் குறித்து...
ஜன நாயகன் திரைப்பட போஸ்டரில் மாண்புமிகு முதல்வர் விஜய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான பகவதி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை ஜூலை 24 ஆம் தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்து வருகின்றன.
Advertisement
Advertisement
முக்கியமாக தணிக்கைச் சான்றிதழ் போஸ்டரில் மாண்புமிகு தமிழக முதல்வர் சி. ஜோசஃப் விஜய் என்றே எழுதப்பட்டுள்ளது. இதனால், திரையில் தளபதி விஜய்க்குப் பதிலாக, ‘மாண்புமிகு முதல்வர்’ என்றே பெயர் இருக்கும். மெர்சல் திரைப்படத்திற்கு முன்பு வரை இளைய தளபதி விஜய் எனப் பெயர் இருந்தது. மெர்சலுக்குப் பின் தளபதி விஜய் என்றானது. ஜன நாயகனில் முதல்வர் விஜய் என இருக்கப் போவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
On the movie poster for Jana Nayagan, he is referred to as Honorable Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.