ஜன நாயகன் படத்தைப் பார்த்த முதல்வர் விஜய்!
ஜன நாயகன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தை முதல்வர் விஜய் இன்று பார்த்தது குறித்து...
ஜன நாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் பார்த்து ரசித்தார்.
சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்படக் கல்லூரியில் திரையிடப்பட்ட படத்தை முதல்வர் விஜய் கண்டு களித்தார்.
திரைத் துறையில் தனது கடைசிப் படம் என்று முன்பே அறிவித்திருந்த நிலையில், தேர்தலுக்கு முன்பு வெளியாகவேண்டிய திரைப்படம், ஆட்சி அமைத்த பிறகு வெளியாவதால் முதல்வராகச் சென்று படத்தைப் பார்த்துள்ளார்.
Advertisement
Advertisement
இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்சார் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நாளை திட்டமிட்டபடி வெளியாகவுள்ளது.
விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது.
இதனிடையே சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் படத்தைப் பார்த்துள்ளார்.
Chief Minister Vijay watched the movie Jana Nayagan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.