ஜன நாயகனுக்கு ஏ சான்றிதழ்! அதிகாரப்பூர்வ போஸ்டர்!
ஜன நாயகனுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது...
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜன. 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்திடமிருந்து சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
தற்போது, நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான பகவதி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை ஜூலை 24 ஆம் தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்து வருகின்றன.
It has been officially announced that the film Jana nayagan, starring Vijay, has been awarded an 'A' certificate.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.