ஞாயிறு கொண்டாட்டம்

காக்கிகளின் மனிதம்

ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் படத்தின் பூஜை படப்பிடிப்புடன் தொடங்கியுள்ளது.

DIN

ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் படத்தின் பூஜை படப்பிடிப்புடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமான அக்ஷிதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

"வெப்' மற்றும் "7 ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இப்படத்தினை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும்போது... 'எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குற்றம் செய்பவர்கள் இதற்கு விதி விலக்கல்ல. இங்கே அப்படி ஒரு போலீஸ் எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஆயிரம் சவால்கள். அதிலிருந்து அவர் எப்படி விடுபட்டு நேர்மையைப் பரிசாக பெற்றார் என்பதே கதை. இங்கே அற்புதமான அதிகாரிகளின் மனிதத்தை அரசியலும் சாதியும் தின்று விடுகின்றன.

அரசியலும் சாதியும் பணமும் காவல் துறையை இயக்கி கொண்டிருக்கிற வரை நம்மால் உரிய பாதுகாப்பை உணர முடியாது. இப்படி பல விஷயங்களை இது இந்த சமூகத்தின் பார்வைக்கு வைக்கும்'' என்றார் இயக்குநர். படப்பிடிப்பு கோவை, ஏற்காடு, கொடைக்கானல், சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

காவிரி டெல்டா பகுதியில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் அழிப்பு! எல்லைப் பாதுகாப்புப் படை

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT