ஞாயிறு கொண்டாட்டம்

ராக்கி ஸ்பெஷல்...

பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஸனாய் போஸ்லே, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜை 'டேட்டிங்' செய்வதாக வதந்தி பரவி வந்தது.

சுதந்திரன்

பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஸனாய் போஸ்லே, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜை 'டேட்டிங்' செய்வதாக வதந்தி பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆண்டு ஜனவரியில் ஸனாய் இன்ஸ்டாகிராமில் 'சிராஜ் எனது அன்புச் சகோதரர் ..' என்று செய்தி வெளியிட்டார். சிராஜும் 'ஸனாய் எனது அன்பான சகோதரி' என்று மறுபதிவு செய்தார். ஆனாலும் வதந்தி அடங்கவில்லை.

ஆகஸ்ட் 9-இல் ஸனாய் தனது ரக்ஷா பந்தனை சிராஜுடன் கொண்டாடினார். அப்போது ஸனாய் ஒரு 'திடுக்' நிகழ்வை அரங்கேற்றினார். பச்சை சல்வார் உடையில் இருந்த ஸனாயும் சிராஜின் மணிக்கட்டில் 'ராக்கி' கட்ட, அதை படம் பிடித்து தந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வட நாட்டு வழக்கப்படி, சகோதரனுக்கு சகோதரி மட்டுமே ராக்கியைக் கட்ட முடியும். வெள்ளை குர்தா-பைஜாமாவில் இருந்த சிராஜும் ராக்கியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஒரு பரிசு ஒன்றையும் ஸனாய்க்கு சிராஜ் வழங்கினார்.

'ஆயிரத்தில் ஒரு நிகழ்வு இது' என்று ஸனாய் இந்தக் காணொளிக்கு தலைப்பும் கொடுத்துள்ளார். ஆனாலும் வதந்தி அடங்கவில்லை. ஸனாய் போஸ்லே தனது பாட்டி ஆஷா போஸ்லேவைப் போலவே பாடகி. ஸனாய் 'மெயின் ஹீர் தேரி' போன்ற தனிப்

பாடல்களை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'வொண்டர்மேன்' டூரில் இணைந்து மே 3 -இல் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்கக் கச்சேரியில் பங்கேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்

வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க மலையடிவாரத்தில் சோலாா் மின் வேலி

சாத்தூா் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி

கூட்டுறவு சங்க ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடக்கம்

SCROLL FOR NEXT