பெ.பெரியார்மன்னன்
உலகமே இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் காலத்திலும், உடலை வளமாக்கி, உள்ளத்தில் அச்சத்தை நீக்கி தன்னம்பிக்கையை அள்ளித் தரும் தற்காப்புக் கலையான சிலம்பம் கற்பதில் சிறார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த சிலம்பம், கராத்தே தற்காப்புக்கலை பயிற்றுநர் சதீஷிடம் பேசியபோது:
'கைப்பேசிகள், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல், மாறிவரும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயது வித்தியாசமின்றி உடல், மன நலப் பாதிப்புகளுக்குப் பெரும்பாலானோர் ஆளாகியுள்ளனர்.
மருந்தில்லா மருத்துவ முறைகளான நடைப்பயிற்சி, யோகா, தியான பயிற்சிகளையும், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிகளையும் பலரும் கற்றுவருகின்றனர். இதனால், மருந்தில்லா மருத்துவ முறைகள், உடல், மன நலம் சார்ந்த தற்காப்புக்கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் மட்டுமின்றி, சிறப்புப் பயிற்சி மையங்களிலும் சேர்ந்து அதிகாலை நேரத்தில் ஆர்வத்தோடு சென்று ஏராளமான சிறுவர் சிறுமியர் சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியமான தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நான் 15 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களுக்குக் கற்பித்து வருகிறேன். இவர்களில் பலர் போட்டிகளில், சாதனை நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர். திருவிழாக்கள், பள்ளி நிகழ்வுகளில் அரங்கேற்றம் செய்தும் அசத்தி வருகின்றனர்'' என்கிறார் சதீஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.