ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

மறைந்த கல்வியாளரும், 'பத்மஸ்ரீ' விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மறைந்த கல்வியாளரும், 'பத்மஸ்ரீ' விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு 'கலாசார விருது' வழங்கப்பட்டது. விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான, அதே சமயம் எளிமையான பாணியில் பேசி, அனைவரையும் கவர்ந்துள்ளார்.

'ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர்த் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும்' என்று ரஜினி பேசியது அனைவரையும் கவர்ந்தது.

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. ' எப்படி சார் நிறையப்பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நான் யாரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை.

நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன். இப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும். எனக்கு வாழ்க்கையில் கடன் நிறைய இருக்கிறது. படம் எடுக்க முடியவில்லை. கதை சொல்லப் போனால் ஹீரோக்கள் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன்' என சேரன் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் 45-ஆவது படமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சூர்யா தனது 46-ஆவது படமாக, கடந்த ஆண்டு பிற்பாதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த தெலுங்குப் படமான 'லக்கி பாஸ்கர்' படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜு நடிக்கிறார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆவேசம்' பட இயக்குநர் ஜித்து மாதவனுடன் சூர்யா இணைந்திருக்கிறார். இதில் நஸ்ரியா, நஸ்லன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் சூரி நடித்து வரும் படம் 'மண்டாடி'. மகிமா நம்பியார், சுஹால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் சூரியை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, 'அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.

இரவு நேரப் படப்பிடிப்பில் வேடிக்கைப் பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும். நன்றிகள்' எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு, 'உங்கள் அன்புக்கு நன்றி. இனி எல்லாம் கவனமாக நடக்கும். உங்கள் பகுதியில் உள்ள அனைவரையும் விரைவில் சந்தித்துப் பேசுகிறேன்' என அந்த ரசிகருக்கு சூரி பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT