ஞாயிறு கொண்டாட்டம்

எமன் கட்டளை

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்து வரும் படம் எமன் கட்டளை.

DIN

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்து வரும் படம் எமன் கட்டளை.

மறைந்த நடிகர் மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சந்திரிகா நடிக்ககிறார். அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார் சீனிவாசன், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.ராஜசேகர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....'' இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது.

இதனால் மணப் பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள். இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான்.

அங்கு எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாள்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான்.

பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான். இதற்கிடையில் அவளது தாய்மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாள்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது.

எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லுவதே திரைக்கதை'' என்றார் இயக்குநர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாதத்தில் படம் திரைக்கு வரவுள்ளது. ஒளிப்பதிவு - ஏ.கார்த்திக் ராஜா. இசை -என்.எஸ்.கே. பாடல்கள் -சினேகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

SCROLL FOR NEXT