ஞாயிறு கொண்டாட்டம்

ரூ.5-க்கு மதிய உணவு!

புஹாரி ஜங்ஷன் யூ டியூப் சேனல் சந்தாதாரர்களும், அன்பு சூழ் உலகு அறக்கட்டளையினரும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்தான் அன்பு சூழ் 5 ரூபாய் கேன்டீன்.

தென்றல்

'புஹாரி ஜங்ஷன் யூ டியூப் சேனல்' சந்தாதாரர்களும், 'அன்பு சூழ் உலகு' அறக்கட்டளையினரும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்தான் 'அன்பு சூழ் 5 ரூபாய் கேன்டீன்'.

மதுரையில் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்துச் செல்லும் தூரத்தில் சாலையோரம் கேன்டீன் செயல்படுகிறது. இங்கு ஜூலை 1-இல் இருந்து மதியம் மட்டும் உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மதிய உணவில் பொன்னி அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொறியல் அடங்கும். உழைக்கும் மக்களுக்கு தரமான உணவை குறைந்தக் கட்டணத்தில் வழங்கும் ஒரு சமூக முயற்சி இது.

இதுகுறித்து கேன்டீன் நிர்வாகிகள் கூறியது:

'மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கேன்டீன் செயல்படும். மதிய உணவுக்கு டோக்கன் வழங்குவது காலை 11.30 மணி முதல் தொடங்கும். ஒருவருக்கு ஒரு டோக்கன் மட்டும்தான். அமர்ந்து உணவருந்த இட வசதி இல்லாததால், தற்போதைக்கு உணவு பார்சலில் மட்டுமே வழங்கப்படும்.

கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்காக, திருமங்கலம் வர வேண்டி உள்ளது. அப்படி வருபவர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த உணவகத்தைத் தொடங்கியுள்ளோம்' என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: முதல்வர் இல்லம் அருகே ஏர்கன் வைத்திருந்த நபர் கைதாகி விடுதலை

வாரிசு தொடர் நடிகர் மாற்றம்! இனி இவர்தான்!

ரூ.10 கோடி தங்கம் கொள்ளை: வடமாநில தம்பதி உள்பட மேலும் மூவர் கைது!

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம்

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT