ஞாயிறு கொண்டாட்டம்

பாலிவுட்டை கலக்கும் இசை

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள 'சையாரா' படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது.

DIN

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள 'சையாரா' படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது. 'சையாரா' டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நெüடியல் பாடிய இரண்டாவது பாடல் பர்பாத் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான 'தும் ஹோ தோ' என்கிற காதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலை இன்று இந்தியாவின் மிகவும் பேசப்படும் இளம் பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, நாடு முழுவதும் போற்றும் ஏராளமான மெகா ஹிட் பாடல்களை வழங்கிய மோஹித் கூறுகையில், ''விஷால் 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்ததிலிருந்து, நானும் அவரும் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். சரியான தருணத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.

அது 'சையாரா' படத்தில் நிகழ்ந்தது. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி நாட்களில் அவர் மனவேதனையில் இருந்தபோது, எனது இசை அவரை கவர்ந்தது. உங்கள் படைப்புகள் ஒருவரின் மீது இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் கேட்கும் போது, அது ஒரு மிகப்பெரிய உணர்வு.

இசை மக்களின் இதயங்களைத் தொடும் திறன் கொண்டது என்றும், அது மிகவும் தூய்மையான ஊடகம் என்றும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எனவே எனது 20 ஆண்டுகால இசை இயக்கம் மற்றும் உருவாக்கத்தில், எனது பாடல்கள் மூலம் மக்களுக்கு நினைவுகளை உருவாக்கியதற்கு நான் நன்றி உள்ளவனாக உணர்கிறேன். விஷால் மிஸ்ரா எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் திறமையான கலைஞர்களில் ஒருவர், அவருடன் பயணிப்பது ஒரு பாக்கியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு

பாலஸ்தீனம் மீது தாக்குதல்: காங்கயத்தில் ஆா்ப்பாட்டம்

அக்டோபா் 2-இல் டாஸ்மாக் கடைகள் மூடல்

கிருஷ்ணன் வக நிதி லிமிடெட் பங்குதாரா்களுக்கு 20 சதவீதம் ஈவுத்தொகை

SCROLL FOR NEXT