முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கிரிக்கெட் வீரர்களின் உணவகங்கள்...

வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்கின்றனர்.

Updated On : 29 ஜூன், 2025 at 12:03 AM
விராட் கோலி
பகிர்:

கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்கின்றனர். இந்த வகையில் உணவகங்கள் நடத்திய நடத்தும் சில பிரபலங்கள்:

முகமது சிராஜ்:

வேகப் பந்து வீச்சாளரான இவர், ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் சாலை 3-இல் தன்னுடைய 'ஜோஹர் பானா' உணவகத்தைத் திறக்கவுள்ளார். இங்கு மொகலாய, பாரசீக, அரேபிய, சீன உணவு வகைகள் கிடைக்கும்.

Advertisement

விராட் கோலி:

2017-இல் தில்லி ஆர்.கே.புரத்தில் 'ஒன் 8 கம்யூன்' என்ற சைவ உணவகத்தைத் தொடங்கினார். சூப்பர் புட், சாலட், சல்லி டோஃபு போன்ற தனித்துவமான வகைகளுடன் இயங்கி வருகிறது. தில்லி குருகிராம் பகுதியில் வேறு ஒருவருடன் இணைந்து 'நியூவா' என்ற உணவகத்தையும் நடத்திவருகிறார். இது தவிர ஒன்8கம்யூனின் ஒரு கிளையை ஹைதராபாத்தில் தொடக்கியுள்ளார்.

ரவீந்தர ஜடேஜா:

'ஜட்டு' என செல்லமாக அழைக்கப்படும் இவரின் உணவகம் குஜராத்தின் ராஜ்காட் நகரில் அமைந்துள்ளது. 'ஜட்டுஸ் ஃபுட் ஃபல்ட்' என்ற பெயரில் முழு நேரமும் செயல்படுகிறது. இளைஞர்களுக்குப் பிடித்த உணவகமாக இது மாறியுள்ளது.

ஜாகிர்கான்:

வேகப்பந்து வீச்சாளரான இவர், 2005-இல் 'டைன்ஃபைன்', 'டான் ஸ்போர்ட்ஸ் லவுஞ்ச்' என்ற பெயர்களில் புணேவில் இரு உணவகங்களைத் தொடங்கினார்.

சச்சின் டெண்டுல்கர்:

'சச்சின்ஸ்' என்ற பெயரில் இரண்டு உணவகங்களைத் துவக்கினார். தற்போது இரண்டுமே மூடப்பட்டு விட்டது.

சுரேஷ் ரெய்னா:

ஆம்ஸ்டர்டேமில் இந்திய உணவகத்தைத் துவக்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

ஷிகர் தவான்:

துபையில் ஜுமேராவில் ஃப்ளையிங் கேட்ச் ஸ்போர்ட்ஸ் கபே என்ற பெயரில் ஒரு ஹோட்டல் திறந்துள்ளார்.

அம்பதி ராயுடு:

'பாராக்ஸ்&ஆண்டிரூம்' என்ற உணவகத்தைத் தொடங்கினார். மூன்று மாடிகளைக் கொண்டது.

சௌரவ் கங்குலி:

'சவுரவ்ஸ்: திபுட் பெவிலியன்' என்ற உணவகத்தை கொல்கத்தாவில் 2004-இல் தொடங்கினார். 2011-இல் மூடி விட்டார்.

கபில்தேவ்:

2008-இல் 'இலெவன்' என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் திறந்தார். இந்தியன், காண்டினென்டல் உணவுகள் கிடைக்கின்றன.

வீரேந்திர ஷேவாக்:

'ஷேவாக்ஸ் பேவரெட்ஸ்' என்ற பெயரில் தில்லியில் ஒரு உணவகத்தைத் திறந்தார். ஆனால் சில மாதங்களிலேயே மூடி விட்டார்.

அஜய் ஜடேஜா:

லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுடன் இணைந்து 'சென்சோ' என்ற பெயரில் ஒரு உணவகம் திறந்தார். இத்தாலியன் உணவுகள் கிடைத்தன. ஆனால் சில மாதங்களிலேயே மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.