கயாடு லோஹர் 
ஞாயிறு கொண்டாட்டம்

அவதூறு : வேதனை அளிக்கிறது - கயாடு லோஹர்

நடிகை கயாடு லோஹர் பேட்டி குறித்து...

தினமணி செய்திச் சேவை

'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், கயாடு லோஹர். 2021-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்துக்குப் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாளப் படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்குப் படத்திலும், 'ஐ பிரேம் யு' என்ற மராத்தி படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

அந்தச் சமயத்தில் கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருந்தார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன. மறுபுறம் தனக்குத் தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரொமோட் செய்து கொள்கிறார் கயாடு லோஹர் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கும் அவரிடம், அவர்மீது எழும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், ''சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான். எந்தத் தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் சிலர் டார்கெட் செய்கிறார்கள்? பின்னால் பேசுபவர்கள் பற்றிக் கவலைப்படவில்லை என்றாலும், ஆழ்மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும்'' என்று பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா மீண்டும் சாம்பியன்

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையின் சீரான வளர்ச்சியை அரசு உறுதிசெய்யும்: முதல்வர் ஸ்டாலின்

சன்டே ஜிம் கேர்ள்... மஹிமா குப்தா!

உங்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவேற்றப்பட்டுவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT