ஞாயிறு கொண்டாட்டம்

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

கார்ட்டூன் நெட்வொர்க், போகோ ஆகிய சேனல்கள் இந்தியாவில் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான விதமாக பள்ளிகளைச் சென்றடையும் முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இணையதளச் செய்திப் பிரிவு

கார்ட்டூன் நெட்வொர்க், போகோ ஆகிய சேனல்கள் இந்தியாவில் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான விதமாக பள்ளிகளைச் சென்றடையும் முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

17 நகரங்களில் உள்ள 1400 பள்ளிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைய வேண்டுமென்கிற முனைப்புடன், ஹாலிவுட் சினிமா தயாரிப்பில் முன்னணியில் உள்ள வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, லக்னோ, கான்பூர் மற்றும் பல நகரங்களில் உள்ள மாணவர்கள் நம் பாரம்பரியத்தைப் பின் தொடரும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''18-ஆவது முறையாக நாங்கள் நடத்தும் இந்தப் பள்ளி நிகழ்ச்சிகள் நாளைய சிந்தனையுள்ள, செயலூக்கம் பெற்ற குடிமக்களை உருவாக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டுடன் நாங்கள் மேற்கொள்ளும் முன்முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். பள்ளிகள், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் இந்த ஆண்டு ஒருங்கிணைந்த முன்முயற்சியாக இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறோம்.

கதாபாத்திரங்களான சோட்டா பீம், லிட்டில் சிங்கம் மற்றும் ஜெய் ஜெகன்நாத் தொடரின் பல்ராம் ஆகியோரின் மூலம் அன்பினை வெளிப்படுத்தவுள்ளோம். ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய இந்த நிகழ்வு வரும் வாரங்களில் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடத்தப்படும். இது நாடு முழுவதும் உள்ள வகுப்பறைகளுக்கு மகிழ்ச்சி, நன்மதிப்புகள் மற்றும் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

திருவத்திபுரத்தில் செப்.10,12, அக்.9-இல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

அரசுப் பேருந்து மரத்தில் மோதி வயலில் இறங்கி விபத்து

SCROLL FOR NEXT