ஞாயிறு கொண்டாட்டம்

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'.

தினமணி செய்திச் சேவை

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ''நான் விழும்போது கைதந்து, எழும் போது உடன் நின்ற என் ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான், 14 வருஷம் ஒரு பிளாஷ்பேக் சொல்கிறேன். அப்போது என்னை 'ஏழாம் அறிவு' பட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அழைத்தார்கள். ஆனால் கடைசியில் ஒரு ஹீரோவை வைத்து நிகழ்ச்சியை நடத்தி விட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிற வாய்ப்புக் கிடைத்திருந்தால், முருகதாஸ் முன்னாடி எதாவது செய்து பட வாய்ப்பு வாங்கி விடலாம் என நினைத்தேன். அதன் பின் அவரின் தயாரிப்பில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து உழைத்தால் மேல வரலாம் என்று நினைத்து உழைத்து இன்றைக்கு முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளேன்.

'கஜினி' படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நான் அடுத்த நாள்தான் படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கு 'ரமணா' படம் ரொம்பப் பிடிக்கும். அப்பா இன்றைக்கு இருந்திருந்தால் கண்டிப்பாக சந்தோஷம் அடைந்திருப்பார். இந்தப் படத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டியது என்று சொன்னார்கள். அந்த இடத்தில் இப்போது நான் இருப்பது பெரிய விஷயம்.

காதல் என்பது தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து அனிருத் காலம் வரைக்கும் இருக்கிற எவர்கிரீன். அப்படி ஒரு காதல் இந்தப் படத்திலும் இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசாரத்தின் போது அவசர ஊா்தியை சேதப்படுத்திய வழக்கு: அதிமுவினா் 4 பேருக்கு முன்பிணை

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் உணவகம் கட்டுவதற்குத் தடை கோரிய வழக்கு

சுற்றுலாத்தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT