ஞாயிறு கொண்டாட்டம்

தங்கப் பதக்கத்தைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்

ஸ்ரீகிருஷ்ண ஹூடா கடந்த முப்பது ஆண்டுகளாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறார்.

பிஸ்மி பரிணாமன்

ஸ்ரீகிருஷ்ண ஹூடா கடந்த முப்பது ஆண்டுகளாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறார். ரோடக்கிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள ரூர்கி என்ற கிராமத்தின் குத்துச்சண்டை அகாதெமியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு ஸ்ரீகிருஷ்ண ஹூடா அந்த அரங்கிற்கு வந்து விட்டார்.

காரணம் அவரது மகள் மீனாட்சி உலகக் குத்துச் சண்டை 48 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றில் கலந்து கொள்கிறார். இங்கிலாந்து, லிவர்பூலில் நடைபெற்ற பெண்களுக்கான குத்துச் சண்டை 48 கிலோ பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக போட்டியிடும் 24 வயதான மீனாட்சி ஹூடா மூன்று முறை உலக சாம்பியனும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான கஜகஸ்தானின் நசிம் கஜை பேயை 4-1 என்ற வித்தியாசத்தில் செ ப்டம்பர் 14-இல் வீழ்த்தினார்.

மீனாட்சி நான்கு உடன் பிறப்புகளில் இளையவர். மூத்த இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் யாரும் விளையாட்டு பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. 2013-இல் மாமா விஜய் ஹூடா குத்துச் சண்டை பயிற்சி நிலையம் தொடங்க 2018 - இல் மீனாட்சியும் குத்துச் சண்டை பயிற்சியில் சேர ஆர்வம் காட்ட, தந்தை "குத்துச் சண்டை பயிற்சியா, ஆட்டோ ஓட்டி குடும்ப செலவை சரி கட்டமுடியவில்லை. குத்துச் சண்டை பயிற்சி பெற, தேவையான உபகரணங்கள் வாங்க பணத்திற்கு நான் எங்கே போவேன்...' என்று எதிர்த்தார்.

"செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். மீனாட்சிக்கு குத்துச் சண்டைக்கு ஏற்ற உயரம், எடை எல்லாம் இருக்கிறது. கூடவே ஆர்வமும் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியமும் இருக்கிறது...' என்று சொல்லி மாமா விஜய் ஹூடா ஸ்ரீகிருஷ்ணனை சமாதானம் செய்தார்.

மீனாட்சி தேசிய, மாநில சாம்பியன் போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் போது செலவுக்காக கடன் வாங்கி தந்தை ஸ்ரீகிருஷ்ண ஹூடா மகளிடம் கொடுப்பார். 2019 -இ ல், இளைஞர் தேசியப் போட்டியில் மீனாட்சி தங்கப் பதக்கம் வென்றார். 2021 இல் சீ னியர் தேசிய சாம்பியன் ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் மீனாட்சியை வந்து சேர்ந்தது.

கூடவே, மினாட்சிக்கு இந்தோ -திபெத்திய எல்லை காவல் துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலையும் கிடைத்தது.

இது குறித்து மீனாட்சி கூறுகையில், 'அந்த வேலையினால் கிடைத்த சம்பளம் எங்கள் குடும்பத்தில் இருந்த பல நிதி சிக்கல்களைத் தீர்த்து வைத்தது. வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த அப்பாவுக்குச் சொந்தமாக ஆட்டோ வாங்க முடிந்தது'' என்கிறார். மீனாட்சி குத்துச் சண்டையில் 2023, 2024-இல் சீனியர் தேசிய போட்டியில் தங்கம் வென்றார்.

இந்த ஆண்டு, முன்னாள் உலக சாம்பியன் நீது கங்காஸை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். பின்னர் தேசிய தேர்வின் போது அதே நபரை மீண்டும் தோற்கடித்தார். கஜகஸ்தானில் நடந்த உலக குத்துச்சண்டை உலகக் கோப்பையில் போட்டியிட்ட மீனாட்சி, கஜகஸ்தானின் வீரருக்கு முன் நான்கு ஒலிம்பியன்களை வென்றுள்ளார். தனது குத்துச் சண்டை போட்டியில் உச்சத்தைத் தொடும் விதமாக நசிம் கஜை பேயை 4- 1 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியுள்ளார், மீனாட்சி.

"சொன்ன மாதிரியே உலக சாம்பியன் ஆகிக் காட்டி விட்டே ன்' என்கிறார் சந்தோசம் பொங்க மீனாட்சி ஹூடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT