ஞாயிறு கொண்டாட்டம்

சாங்கஸ்...

பூமியை அச்சுறுத்துவது தட்ப வெப்பநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும்தான்.

நாகராஜன்

பூமியை அச்சுறுத்துவது தட்ப வெப்பநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும்தான். இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதற்கான காரணம் "க்ரீன்ஹவுஸ் வாயுக்கள்' எனப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, மெதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன மிக அதிக அளவில் உற்பத்தியாகி வளிமண்டலத்தில் கலப்பதால்தான்.

"வாகனப் பயன்பாட்டைக் குறையுங்கள். படிம எரிபொருளான டீசல், பெட்ரோலை குறைவாகப் பயன்படுத்துங்கள்' என்று விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ஓர் அதிசயக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக இத்தாலியில் உள்ள ஒரு எரிமலைத் தீவுக்குச் சென்றனர்.

அங்கு எரிமலை வெடிப்பானது நீருக்கு அடியில் ஏராளமாக கார்பன் டை ஆக்ஸைடை கரைத்திருக்கும் என்பதாலும் இந்த நிலை சயானோபாக்டீரியா (நீலப்பசும் நுண்ணுயிரி) என்ற பாக்டீரியாவை வளர்க்க உதவும் என்று அவர்கள் திட்டமிட்டனர். அங்கு அவர்கள் "யூ.டி.இ.எக்ஸ். 3154', "யூ.டி.இ.எக்ஸ். 3222' ஆகிய இரு புதிய பாக்டீரியாக்களைக் கண்டனர்.

இதில் "யூ.டி.இ.எக்ஸ்.3222' என்ற பாக்டீரியா மிகப் பெரியதாக இருந்தது. இதற்கு "சாங்கஸ்' என்ற பெயரை அவர்கள் சூட்டினர். இதுகுறித்து ஆய்வுக் குழுத் தலைவரான மாக்ஸ் ஷூபெர்ட் கூறியது:

'இந்த பாக்டீரியாவால் தட்பவெப்ப மாறுதலைத் தடுக்க முடியும். இது ஒருவகை பாசி (ஆல்கா) ஆகும். கார்பன் டை ஆக்ஸைடை மிக அதிக அளவில் உறிஞ்சி விடும். அதிக அடர்த்தி கொண்ட இந்த பாக்டீரியா வெகு வேகமாக வளரும். வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை அமோனியாவாக மாற்றும் வல்லமை படைத்தது.

புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது. இதை பெரிய அளவில் உருவாக்கி, "க்ரீன் கேஸ் வாயுக்கள்' எனப்படும் பசுமை வாயுக்களின் நச்சுத் தன்மையை அழிக்க முடியும்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT