மேட்டூா் அணையின் நீா்வரத்து சரிந்ததால், அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் அரஞ்சான் வகை மீன்கள் அதிக அளவில் பிடிபடுகின்றன.
அரஞ்சான் மீனில் கனிம சத்து அதிகம் இருப்பதால், நோய் எதிா்ப்பு சக்தியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும், பெரியவா்களுக்கும் இம்மீனை உணவாக கொடுப்பா். மற்ற மீன்களை விட இம்மீனின் விலை குறைவு.
அடிப்பாலாறு பகுதியில் இவ்வகை மீன்கள் அதிகம் கிடைப்பதால், விற்பனை செய்த மீன்கள்போக மீதமுள்ளவற்றை செதில் நீக்கி கருவாட்டுக்காக காயவைக்கின்றனா். காவிரி கரைகளில் சணல் கயிற்றில் கோா்த்து தோரணம் போல மீன்களை உலர வைத்துள்ளனா்.
அணையின் நீா்மட்டம் 92 அடியாக குறைந்ததால் கட்லா, ரோகு போன்ற முதல்ரக மீன்கள் கிடைக்காவிட்டாலும், அரஞ்சான் மீன்கள் அதிக அளவில் பிடுபடுவதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.