கென் குறித்து தனுஷ்
'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்த கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' படம் வெளியாகி இருக்கிறது.
'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்த கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், ' 'அசுரன்' படத்தில நம்மகிட்ட காடு இருந்தா புடுங்கிடுவாங்க, காசு இருந்தா புடுங்கிடுவாங்க, படிப்பை மட்டும் எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்'னு சொன்னேன். ஆனா, அதைத் தவிர நீ எல்லாமே பண்ணிருக்க... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே 3 பொண்ணுங்களோட பைக்ல உக்காந்திருக்க' என்று கென்னை தனுஷ் கலாய்த்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய தனுஷ், ' திடீரென கென் படம் பண்ணப்போறேன் என ஒரு நாள் வந்து சொன்னான். எதுக்குடா அவசரப்படுற, பொறுமையா இன்னும் சில படங்களில் அசிஸ்டன்ட்டா இருந்து கத்துக்கிட்டு பண்ணலாமேன்னு சொன்னேன். ஆனால், அதெல்லாம் பண்ணிடுவேன் என நம்பிக்கையா சொன்னான். அதே போல இப்போ படத்தை பண்ணி முடிச்சிட்டான்.
அப்போ எல்லாம் பெரிய நடிகர்களைப் பார்த்து பணிவை கத்துக்கச் சொல்வாங்க. ஆனால், இப்போ இருக்க புது ஜெனரேசன் கிட்ட வேகத்தைக் கத்துக்கணும். 24 வயசுல தயாரிப்பாளரைப் பார்த்து கதை சொல்லி, இத்தனை பேர் டீமையும் புடிச்சு ஒரு படத்தை பண்றது சாதாரண விஷயமில்ல. நானெல்லாம் ரொம்ப யோசிச்சு யோசிச்சு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது.
கென் கிட்ட இருந்து நான் அந்த வேகத்தைக் கத்துக்கிட்டேன். கென்னோட ப்ரெண்ட்ஸ் நிறையப் பேரு திசை மாறிப் போயிருக்காங்க. ஆனா, கென் அவன் குடும்பத்துக்காக நிக்குறான். கென் என்னோட பையன் மாதிரி இல்ல பையன் தான். உனக்கும் பெற்றோருக்கும் ஆசிர்வாதம் அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கிறேன்' எனப் பேசியிருக்கிறார்.