அட்டகாசம் தம்பி... யூத் திரைப்படத்தைப் பாராட்டிய சிலம்பரசன்!
யூத் திரைப்படம் குறித்து சிலம்பரசன்...
நடிகர் சிலம்பரசன் யூத் திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. இரண்டு நாள் வசூலாக ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தில் நடித்த கென், நாயகிகள் அனிஷ்மா, மீனாட்சி ஆகியோருக்கு பரவலான கவனமும் கிடைத்துள்ளது.
Advertisement
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "யூத் - புதுமையுடன் கூடிய மனம் நிறைந்த திரைப்படம். என்ன ஒரு அனுபவம்... இக்கதை இன்றைய தலைமுறையினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அருமையான நடிப்பு கென். இந்த இளம் வயதிலேயே நடிப்பிலும் இயக்கத்திலும் கவனிக்க வைத்தது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கான முழுத்தகுதியும் உங்களுக்கு உண்டு தம்பி.
அனிஷ்மா, மீனாட்சி, பிரியான்ஷி யாதவ் ஆகியோர் இப்படத்திற்கு அபாரமான பலத்தைக் கொடுத்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷின் இசை ஒவ்வொரு தருணங்களையும் அழகாக மேம்படுத்தியது. மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இதனைத் தவறவிடாதீர்கள்” எனப் பாராட்டியுள்ளார்.
யூத் திரைப்படத்தில் கென், நடிகர் சிலம்பரசனின் ரசிகராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.