கென் படத்தைக் குறிப்பிட்டு பேசிய மம்மூட்டி!
மம்மூட்டியின் பேச்சு வைரல்...
நடிகர் மம்மூட்டி யூத் திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நடிப்பில் உருவான பேட்ரியாட் திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மலையாள சினிமாவின் பெரிய பான் இந்திய படம் என்பதால் பலரும் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் மம்மூட்டி படம் குறித்து பேசியதுடன் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Advertisement
Advertisement
அப்போது மம்மூட்டி, “அண்மையில் யூத் திரைப்படத்தின் வெற்றி விழா பேச்சைக் கவனித்தேன். அதில், நடிகர் ஒருவர் நடிப்பதற்காக பட்ட கஷ்டங்கள், வீட்டினரின் எதிர்ப்பு, வாய்ப்பு கிடைத்ததும் அடைந்த பரவசத்தை பகிர்ந்துகொண்டார். அது உணர்வுப்பூர்வமானது. நான் நடிக்க வந்த காலத்திலிருந்து அப்படியொரு தருணம் எனக்கு வாய்க்கவில்லை. சினிமா மீதான அந்த இளம் நடிகரிடம் வெளிப்பட்ட பரவசம், ஆர்வம், விருப்பம் இன்று வரை எனக்கும் அப்படியே இருக்கிறது” என்றார்.
யூத் திரைப்படத்தைக் குறிப்பிட்டு மம்மூட்டி பேசியது ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. 74-வயதிலும் சினிமாவில் என்னென்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மம்மூட்டி அறிந்து வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துவதாக கருத்தும் பகிரப்பட்டு வருகிறது.
Actor Mammootty's remarks regarding the film Youth have gone viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.